இந்திய தொடருக்கான இலங்கை அணியின் தலைமை பொறுப்பை ஏற்றார் தசூன் சானக்க - News View

Breaking

Post Top Ad

Thursday, July 8, 2021

இந்திய தொடருக்கான இலங்கை அணியின் தலைமை பொறுப்பை ஏற்றார் தசூன் சானக்க

சகலதுறை ஆட்டக்காரரான தசூன் சானக்க இந்தியாவுடனான தொடருக்காக இலங்கை அணியின் வரையறுக்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகளுக்கான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒக்டோபரில் ஆரம்பமாகும் டி-20 உலகக் கிண்ணம் வரை அவர் இலங்கை அணியின் தலைவராக இருப்பார் என்று நம்பகத் தகுந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில் தனஞ்சய டிசில்வா இந்திய தொடருக்காக இலங்கை அணியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக ஷானக்க இலங்கை அணியை முன்னரே வழிநடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

29 வயதான ஷானக்கவின் தலைமையில் இலங்கை அணி 2019 இல் பாகிஸ்தானுக்கு எதிரான டி-20 தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.

அதேநேரம் இந்த ஆண்டு தொடக்கத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி-20 தொடரின் தலைவராகவும் ஷானக்க தேர்வு செய்யப்பட்டார். 

ஆனால் விசா பிரச்சினைகள் காரணமாக, அவரால் சரியான நேரத்தில் அணியுடன் இணைந்து பயணிக்க முடியவில்லை. ஷானக்க இல்லாத நிலையில் அஞ்சலோ மெத்யூஸ் பொறுப்பேற்று அணியை வழி நடத்தினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad