எல்.பி.எல். தொடரில் மேலும் ஒரு அணியின் உரிமையை நிறுத்தியது இலங்கை கிரிக்கெட் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 8, 2021

எல்.பி.எல். தொடரில் மேலும் ஒரு அணியின் உரிமையை நிறுத்தியது இலங்கை கிரிக்கெட்

லங்கா பிரீமியர் லீக்கில் மேலும் ஒரு அணியின் உரிமையின் ஒப்பந்தத்தை இலங்கை கிரிக்கெட் நிறுத்தியுள்ளது.

அணியின் பெயர் வெளியிடப்படவில்லை, ஆனால் இது யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸின் உரிமையாகும் என்பதை கிரிக்பஸ் வெளிப்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்திய மற்றும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் குழுவுக்கு சொந்தமான உரிமையான அணியாகும்.

இலங்கை கிரிக்கெட் மற்றும் லீக் உரிமைதாரர்கள் - துபாயின் புதுமையான உற்பத்தி குழு FZE (IPG) ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையைத் தொடர்ந்து லீக்கில் இருந்து நீக்கப்பட்ட மூன்றாவது அணியாக யாழ்ப்பாணம் அணி திகழ்கிறது.

கொழும்பு கிங்ஸ் மற்றும் தம்புள்ளை வைக்கிங் ஆகியவ‍ை முன்னதாக லீக்கில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தன.

இந்நிலையில் அடுத்த எல்.பி.எல். தொடருக்காக புதிய அணிகளை உள்வாங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எல்.பி.எல். தொடரின் இரண்டாவது பதிப்பு ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 22 வரை ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment