இலங்கையில் தயாரிக்கப்பட்ட பந்துகள் ஒலிம்பிக் போட்டியில் - News View

Breaking

Wednesday, July 28, 2021

இலங்கையில் தயாரிக்கப்பட்ட பந்துகள் ஒலிம்பிக் போட்டியில்

ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறும் 32 ஆவது ஒலிம்பிக் போட்டித் தொடரின் பேஸ்போல் போட்டிக்கு பயன்படுத்தப்படும் பேஸ்போல் இலங்கையில் தயாரிக்கப்பட்டவையாகும்.

ஒலிம்பிக் போட்டிகளின் வரலாற்றில் இதுவே முதல் தடவையாக இலங்கையில் தயாரிக்கப்பட்ட பந்து போட்டிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இலங்கையில் பேஸ்போல் மிகவும் பிரபலமாக இல்லை என்றாலும், ஜப்பான், அமெரிக்கா மற்றும் தென் கொரியா போன்ற உலகின் வலுவான அணிகள் மோதும் போட்டிகளில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட பந்துகளை போட்டிகளில் பயன்படுத்தியுள்ளன.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பேஸ்போல் சம்பியன்ஷிப்பின் செயல்பாட்டு மேலாளராக சுஜீவா விஜேநாயக்க செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

டோக்கியோ ஒலிம்பிக் அரஙகிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்

No comments:

Post a Comment

Post Bottom Ad