இலங்கையில் கடந்த 6 மாதங்களில் 4,740 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 25, 2021

இலங்கையில் கடந்த 6 மாதங்களில் 4,740 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள்

கடந்த ஆறு மாதங்களில் சிறுவர்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் 4,740 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

சிறுவர்களை ஆபத்தான முறையில் வேலைக்கு பயன்படுத்தும் பிரமுகர்கள் உள்ளிட்ட தனிநபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை (NCBA) தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில், சிறுவர்களை  கொடுமைக்குள்ளாக்கப்படும் வகையிலான, பாதுகாப்பற்ற வேலைகளின் எண்ணிக்கை 76 ஆக அதிகரிப்பதற்கு தேசிய சிறுவர்க பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், இரண்டு மாதங்களுக்குள் இதை ஒரு சட்டமாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக, அதன் தலைவர் பேராசிரியர் முதித விதானபத்திரண தெரிவித்தார்.

கடந்த மாதத்தில் குழந்தைகளுக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்துள்ளன என்றும், சிறுவர்களை வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்துவது தொடர்பில் விசாரணகளை மேற்கொள்ள நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment