(எம்.ஆர்.எம்.வசீம்)
ஐக்கிய தேசிய கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கையை உறுதிப்படுத்திக் கொண்டு முன்கொண்டு செல்வதற்கு தேவையான பரிந்துரைகளை சமர்ப்பிக்க கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்கவினால் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு உறுப்பினர்களாக பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன, தவிசாளர் வஜிர அபேவர்த்தன, செயலாளர் ரங்கே பண்டார, உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் உப தவிசாளர் சாகல ரத்ணாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
அத்துடன் புதிய மக்கள் மன்றம் ஒன்றை அமைப்பதற்கான தகவல்களை ஒன்றுதிரட்டுதல், வாக்காளர் தொகுதி மட்டத்தில் குறைந்த பட்சம் 50 பேர் கொண்ட குழுவொன்றை அமைத்தல், மாவட்ட முகாமையாளர்களாக நியமிக்க முடியுமான நபர்களை இனம் கண்டு, அவர்கள் தொடர்பில் பரிந்துரைகளை சமர்ப்பித்தல், அனைத்து தேர்தல் தொகுதிகளுக்கும் சட்டச் செயலாளர், இணையத்தள நடவடிக்கைகளுக்கான செயலாளர், பயிற்றுவித்தல் தொடர்பான விடயதான செயலாளர் போன்ற பதவிகளுக்கு பொருத்தமான கட்சி ஆதரவாளர்களை இனம் காண்பது உடபட பல பொறுப்புக்கள் இந்த குழுவுக்கு சாட்டப்பட்டிருக்கின்றன.
கொவிட் வைரஸ் பரவிச் செல்வதால், தனிமைப்படுத்தல் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு டிஜிடல் மற்றும் தகவல் தொழிநுட்பங்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இந்த நடவடிக்கைகளின் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ரணில் விக்ரமசிங்க குழு உறுப்பினர்களுக்கு அறிவித்திருக்கின்றார்.
No comments:
Post a Comment