மும்பை கனமழைக்கு 20 பேர் பலி - News View

Breaking

Post Top Ad

Sunday, July 18, 2021

மும்பை கனமழைக்கு 20 பேர் பலி

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 1 மணியளவில் செம்பூர் பகுதியில் உள்ள இரண்டு அடுக்கு வீடு ஒன்று சரிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர்.

விக்ரோலி பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் பெய்த கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்தனர்.

நிகழ்விடங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த ஐந்து நாட்களுக்கு மும்பையில் கனமழை தொடரும் என்கிறது இந்திய வானிலை ஆய்வுத்துறை.

இந்த நிகழ்வுகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad