2020 ஒலிம்பிக் டோக்கியோவில் கோலாகலமாக ஆரம்பம் : 'உணர்வால் ஒன்றிணைவோம்' : எந்தெந்த நாடுகளில் எந்தெந்த அலைவரிசையில் ஒளிபரப்பு? - News View

Breaking

Friday, July 23, 2021

2020 ஒலிம்பிக் டோக்கியோவில் கோலாகலமாக ஆரம்பம் : 'உணர்வால் ஒன்றிணைவோம்' : எந்தெந்த நாடுகளில் எந்தெந்த அலைவரிசையில் ஒளிபரப்பு?

உலகின் மிகப் பெரும் விளையாட்டுப் போட்டி நிகழ்வான ஒலிம்பிக் போட்டித் தொடர் ஜப்பானின் டோக்கியோ நகரில் கோலாகலமாக ஆரம்பமானது.

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு இடம்பெற வேண்டிய 32ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டித் தொடர் இன்று (23) பிற்பகல் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் 'உணர்வால் ஒன்றிணைவோம்' (United by Emotion) எனும் எண்ணக்கருவின் கீழ் கோலாகலமாக ஆரம்பமானது.

முழுமையாக பார்வையாளர்கள் இன்றி இன்று (23) ஆரம்பமாகும் இந்த ஒலிம்பிக் தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் 08 ஆம் திகதி வரையான 17 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.

33 விளையாட்டுகள், 339 போட்டிகள், 204 நாடுகளைச் சேர்ந்த 11,238 போட்டியாளர்களின் பங்கேற்புடன் இடம்பெறவுள்ளன.

புதிதாக இம்முறை 5 விளையாட்டுகளும் (Baseball/Softball, Karate, Skateboarding, Sport Climbing, Surfing) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை சார்பாக இம்முறை ஒன்பது வீர வீராங்கனைகள் பங்குகொள்கிறார்கள்.

இலங்கை மெய்வல்லுனர்கள் ஒலிம்பிக் இல் பங்குபெறுவது 1928 இல் ஆரம்பமானது. அதன் பின்னர் 1948 இல் பங்குகொண்டார்கள், முதன் முதலில் Duncan White 400மீ தடை தாண்டலில் 1948 இல் இலண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கத்தை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் 1952, 1956, 1960, 1964, 1968, 1972, 1980, 1988, 1992, 1996, 2000, 2004, 2008, 2012 மற்றும் 2016 என இலங்கை வீரர்கள் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிட தக்கது.

1976, 1984 இல் யாரும் பங்குகொள்ளவில்லை. 1948 இன் பின்னர் இலங்கைக்கு சுஷந்திகாவினால் மீண்டும் ஒரு வெள்ளி பதக்கம் 2000 ஆண்டு சிட்னியில் 200மீற்றர் ஓட்ட போட்டியில் கிடைத்தது.

தமயந்தி தர்ஷா, சிரியானி குலவன்ஷ, சுகத் திலகரட்ன, ரோஹன் பிரதீப்குமார போன்ற பல சர்வதேச புகழ் பெற்ற வீரர்கள் ஒலிம்பிக் தொடர்களில் பங்கு பற்றியிருந்தார்கள்.

ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பட்மின்டன் தொழில்நுட்ப அதிகாரியாக கடமையாற்றும் பொருட்டு ஊவா மாகாணத்தின் பசறை தமிழ் மகா வித்தியலாத்தில் (தேசிய பாடசாலை) உடற்கல்வி ஆசிரியையாக கடமையாற்றும் மாரிமுத்து அகல்யா ஜப்பான் தெரிவாகியுள்ளார்.

ஒலிம்பிக் விளையாட்டு விழா வரலாற்றில் தொழில்நுட்ப அதிகாரியாக கடமையாற்றுவதற்கு தெரிவாகியுள்ள முதலாவது இலங்கை தமிழர், குறிப்பாக மலையகத் தமிழர் என்ற சாதனைக்கும் பெருமைக்கும் இதன் மூலம் அகல்யா உரித்துடையவராகியுள்ளார்.

அதேபோன்று, குத்துச் சண்டை போட்டிகளுக்கான நடுவராக இலங்கையின் விளையாட்டுத்துறை வரலாற்றில் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியின் பெண் நடுவராக நெல்கா ஷிரோமளா தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் நிகழ்வுகளை இலங்கையில் ரூபவாஹினி மற்றும் சனல் ஐ அலைவரிசைகள் மற்றும் சோனி பிக்சர்ஸ் வலையமைப்பின் அலைவரிசை ஊடாக பார்வையிடலாம்.

உலகம் முழுவதும் ஒலிம்பிக் ஒளிபரப்பாகும் அலைவரிசைகளின் விபரம்

No comments:

Post a Comment