சீனாவின் 15 நகரங்களுக்கு பரவியது டெல்டா வைரஸ் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 31, 2021

சீனாவின் 15 நகரங்களுக்கு பரவியது டெல்டா வைரஸ்

சீனாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது மிக மோசமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் நான்ஜிங் விமான நிலையத்தில் ரஷ்யாவில் இருந்து வந்த துப்புரவு பணியாளர் ஒருவரிடம் இந்த டெல்டா வகை வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது.

இதனையடுத்து நான்ஜிங்கில் இருந்து விமான சேவைகள் 2 வார காலத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் நான்ஜிங் நகரில் கொரோனா பரிசோதனைகள் கடுமையாக்கப்பட இருப்பதாகவும் சீனா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நான்ஜிங்கில் இருந்து தற்போது பீஜிங் உட்பட 15 நகரங்களுக்கு இந்த டெல்டா வகை வைரஸ் பரவி இருக்கிறது.

பீஜிங்கில் கடந்த 175 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிகவேகமாக அதிகரித்திருக்கிறது.

வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்கு வருபவர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். புதிய டெல்டா வகை வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களில் 7 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவில் இதுவரை கொரோனா தொற்றால் 92,875 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இதுவரை மொத்தம் 4,636 பேர் சீனாவில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

No comments:

Post a Comment