இலங்கையில் டெங்கு காய்ச்சலால் 10,547 பேர் பாதிப்பு : 7 உயிரிழப்புக்கள் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 29, 2021

இலங்கையில் டெங்கு காய்ச்சலால் 10,547 பேர் பாதிப்பு : 7 உயிரிழப்புக்கள்

2021 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் 10,547 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 7 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் மழையுடன் கூடிய வானிலை காணப்படுவதனால் நகரப்புர பகுதிகளில் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது.

பருவ மழை பெய்யும் நிலையில் நுளம்புகளினால் பரவும் நோய்க்கான ஆபத்து அதிகமாக இருப்பதால் டெங்கு பரவாமல் தடுப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி கடந்த ஆண்டு மொத்தம் 30,802 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சுமார் 30 உயிரிழப்புகளும் நாட்டில் பதிவாகியுள்ளன.

கொழும்பு, கம்பாஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், கண்டி, காலி, மாத்தளை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களே டெங்கு அதிகம் ஆபத்துள்ள பகுதிகளாகும்.

டெங்கு நோய் தொடர்பான பின்வரும் அறிகுறிகள் காணப்படின் நோயாளியை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கவும்.

திரவ வகைகளைப் பருக முடியாதிருத்தல் (அடிக்கடி வாந்தயெடுத்தல்)

உணவு, பாண வகைகளை நிராகரித்தல்

கடுமையான தாகம்

நோயாளி சிறுநீர் கழிக்குமட தடவைகள் குறைவடைதல் (6 மணித்தியாலத்திற்கு கூடுதலான நேரத்திற்குள் சிறுநீர் வெளிவராமை)

கடுமையான வயிற்று வலி

தூக்க நிலைமை

நடத்தையில் மாற்றம் ஏற்படல்

சிவப்பு / கறுப்பு / கபில நிற வாந்தியெடுத்தல்

கறுப்பு நிற மலம் வெளியாதல்

குருதிப்பெருக்கு (முரசுகளிலிருந்து குருதிப்பெருக்கு, சிறுநீர் சிவப்பு நிறத்தில் வெளியாதல்)

தலைசுற்றுதல்

கைகால்கள் குளிரடைதல்

No comments:

Post a Comment