பசில் ராஜபக்‌ஷவுக்கு எதிராக அரசியல் சதிகள் - SLPP வழக்கறிஞர்கள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 2, 2021

பசில் ராஜபக்‌ஷவுக்கு எதிராக அரசியல் சதிகள் - SLPP வழக்கறிஞர்கள் சங்கம்

இலங்கையில் கொவிட் தொற்றை முற்றாக ஒழிப்பதற்காக அரசாங்கம் செயற்படும் இவ்வேளையில் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த ஊக்கமாக இருக்கின்ற ஜனாதிபதி செயலணியின் பிரதானி பசில் ராஜபக்‌ஷவுக்கும் எதிராக அரசியல் சதிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வழக்கறிஞர்கள் சங்கம், இச்செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.

அந்த சங்கம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, கொவிட்19 மூன்றாவது அலையின் மத்தியில் இதுவரை எங்களது நாடு பல்வேறு துயரமான நிலைகளுக்கு முகங்கொடுத்துள்ளது. இன்று தடுப்பூசி ஏற்றுவதன் மூலம் மக்களை இந்த தொற்றிலிருந்து விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் எடுத்துள்ளனர். 

அதுமட்டுமன்றி அரசாங்கம் மக்களுக்கு பல்வேறு நிவாரணங்களையும் பெற்றுக் கொடுத்து பொருளாதார ரீதியிலிருந்து மீட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை பாதுகாத்துக் கொள்வதற்கும் பொருளாதார நெருக்கடிகளை பயணத்தடையை ஏற்படுத்தி கட்டுப்படுத்துவதன் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும் அரசாங்கமும் இதுவரை பாரிய செயற்பாடுகளை நிறைவேற்றியுள்ளது.

அதுபோன்று இலங்கையின் சுகாதார பிரிவு, இராணுவ, பொலிஸ் மற்றும் முப்படையினர் தங்களது உயிர்களை பணயம் வைத்து அர்ப்பணிப்புடன் இந்த தொற்றை தோல்வியடையச் செய்யும் போராட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனை கௌரவமாகவும் நன்றியுணர்வோடும் நினைவு கூருகின்றோம். 

இந்தச் சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதிக்கும் அரசுக்கும் அதுபோல் இதற்கு ஊக்கமாக இருக்கின்ற ஜனாதிபதி செயலணியின் பிரதானி பசில் ராஜபக்‌ஷவுக்கும் எதிராக அரசியல் சதிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் இப்பொழுது எங்களுக்கு தெளிவாகியிருக்கின்றது.

நீதிமன்ற வழக்குகள், பத்திரிகை அறிக்கைகள், தொலைக்காட்சி நேர்காணல்கள், சமூக ஊடகங்கள் ஊடாக இந்த சதி வெளிப்பட்டுள்ளது. 

பசில் ராஜபக்‌ஷவுக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கும் இந்த செயற்பாட்டினொன்றாக இனங்காணப்பட்டுள்ளது. 

இலங்கை பொதுஜன வழக்கறிஞர்கள் சங்கம் இதனை கட்டிப்பதுடன் இவ்வாறான செயற்பாடுகளை தோல்வியடையச் செய்ய தம்மால் இயன்ற பங்களிப்பை நல்குவதாக தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment