அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் சிம்பாப்வே வீரர் கைல் ஜார்விஸ் - News View

About Us

About Us

Breaking

Friday, June 18, 2021

அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் சிம்பாப்வே வீரர் கைல் ஜார்விஸ்

சிம்பாப்வே அணியின் வேகப் பந்து வீச்சாளர் கைல் ஜார்விஸ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

32 வயதான கைல் ஜார்விஸ், காயம் மற்றும் உடல் நலக் குறைவினால் ஒரு வருடம் பாதிப்படைந்திருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பனை வெளியிட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் அறிமுகமான அவர் 13 டெஸ்ட், 49 ஒருநாள் மற்றும் 22 டி-20 போட்டிகளில் விளையாடி முறையே 46, 58 மற்றும் 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் கொவிட் -19, மலேரியா மற்றும் கொலராடோ டிக் காய்ச்சல் ஆகிய மூன்று நோய்களையும் ஜார்விஸ் எதிர்த்துப் போராடி வந்தார்.

இறுதியாக 2020 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின்போது, அவரது முதுகில் ஏற்பட்ட காயம் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஜார்விஸை விலக்கி வைத்தது.

No comments:

Post a Comment