சுருவில் கடற்கரையில் கரை ஒதுங்கிய இராட்சத திமிங்கலம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 15, 2021

சுருவில் கடற்கரையில் கரை ஒதுங்கிய இராட்சத திமிங்கலம்

ஊர்காவற்துறை - சுருவில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

32 அடி நீளமான குறித்த திமிங்கலத்தை காலை 8.30 மணியளவில் மீனவர்கள் கண்டுள்ளனர்.

தொடர்ந்து மீனவர்களால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த திணைக்கள அதிகாரிகள் வருகை தந்துள்ளனர்.

குறிப்பாக வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் திமிங்கலம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு கடற்றொழில் திணைக்கள உத்தியோகர்கள், பொது சுகாதார பரிசோதகர், பொலிஸார் வருகை தந்திருந்ததாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment