கொரோனா வைரசை செயலிழக்க வைக்கும் முகக்கவசம் கண்டுபிடிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 15, 2021

கொரோனா வைரசை செயலிழக்க வைக்கும் முகக்கவசம் கண்டுபிடிப்பு

இந்தியாவில் கொரோனா வைரசை செயலிழக்க வைக்கும் முகக்கவசம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மராட்டிய மாநிலம் புனேயைச் சேர்ந்த ஒரு புதிய நிறுவனம், முப்பரிமாண அச்சிடல் மற்றும் மருந்தியலை ஒருங்கிணைத்து ஒரு முகக்கவசத்தை தயாரித்துள்ளது.

இந்த முகக்கவசத்தை தொடும் கொரோனா வைரஸ் செயலிழந்து விடும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையும் உறுதி அளித்துள்ளது.

திங்கர் டெக்னாலஜிஸ் என்ற அந்த புனே நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய முகக்கவசத்தில், விருசிடேஸ் எனப்படும் வைரஸ் எதிர்ப்புபொருள், பூசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment