அமைச்சர் அலி சப்ரி கொரோனர் சங்கத்துடன் சந்திப்பு - தடுப்பூசி வழங்க உடனடி ஏற்பாடு - News View

About Us

About Us

Breaking

Thursday, June 3, 2021

அமைச்சர் அலி சப்ரி கொரோனர் சங்கத்துடன் சந்திப்பு - தடுப்பூசி வழங்க உடனடி ஏற்பாடு

இலங்கையின் கொரோனர்கள் சங்கம் இன்று (03) zoom வழியாக நீதி அமைச்சர் அலிசப்ரியுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டது.

இந்த தொற்று நோய்களின் போது அவர்கள் தொடர்ந்து செய்த சேவைக்கு கொரோனர்ஸ் அமைப்பினருக்கு அமைச்சர் நன்றி தெரிவித்ததோடு, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அவர்கள் மேற்கொண்ட கடின உழைப்பையும் பாராட்டினர்.

நாடு முழுவதிலுமுள்ள கொரோனர்கள் zoom செயலி வழியாக இணைக்கப்பட்டு, முன்னோக்கிச் செல்லும் வழி மற்றும் வேலை தொடர்பான சில விடயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

கொரோனர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்படாதது கூட்டத்தின் போது எழுப்பப்பட்ட ஒரு கவலையாக இருந்ததுடன், தடுப்பூசி போடப்பட்ட குறிப்பிட்ட பகுதிகளில் தடுப்பூசி போடப்பட்டிருப்பது பலராலும் உறுதிப்படுத்தப்பட்டது.

இதன் நிமித்தம் கொரனர்களுக்கு உடனடியாக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நீதிமன்றங்கள் மூடப்பட்டதால், சில கொரோனர்களுக்கு நிலுவையில் உள்ள கொடுப்பனவுகளை சரிபார்க்குமாறு அமைச்சக அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட பல்வேறு விடயங்களுக்கு நியாயமான தீர்வை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு அமைச்சக அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

No comments:

Post a Comment