கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் செவ்வாய்க்கிழமை சபாநாயகரிடம் - News View

About Us

About Us

Breaking

Friday, June 18, 2021

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் செவ்வாய்க்கிழமை சபாநாயகரிடம்

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் பாராளுமன்றத்தில் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (22) சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக, எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையை அதிகரிக்க எடுத்த தீர்மானத்திற்கு அமைய, மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதி மீறப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் குறித்த பதவியில் அவர் இருப்பதற்கு உரித்துடையவர் அல்ல என, 10 காரணங்களை முன்வைத்து, ஐக்கிய மக்கள் சக்தியினால், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரான உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்றத்தில் கொண்டுவருவதற்கான கையொப்பம் பெறும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

அதற்கமைய சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ள குறித்த ஆவணத்தில் இதுவரை 30 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளதாக லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment