மேற்கு ஆபிரிக்காவில் முடிவுக்கு வந்துள்ள எபோலா நோய்ப் பரவல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 22, 2021

மேற்கு ஆபிரிக்காவில் முடிவுக்கு வந்துள்ள எபோலா நோய்ப் பரவல்

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கினியில் எபோலா நோய்ப்பரவல் முடிவுக்கு வந்திருப்பதாக, உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு பெப்ரவரி அங்கு தொடங்கிய நோய்ப்பரவல் 16 பேரைப் பாதித்தது. அவர்களில் 12 பேர், இறந்தனர்.

2013 இல் தொடங்கி மூவாண்டு நீடித்த இபோலா நோய்ப்பரவல், கினி, லைபீரியா, சியேரா லியோன் ஆகிய நாடுகளில் 11 ஆயிரத்துக்கும் அதிகமானோரைப் பலிவாங்கியது.

எபோலாவுக்கு எதிரான சுமார் 24,000 தடுப்பு மருந்துகளை கினிக்கு அனுப்ப, உலகச் சுகாதார நிறுவனம் உதவியது. கிருமித் தொற்றால் அதிகம் பாதிக்கக் கூடிய பகுதிகளில் உள்ள சுமார் 11 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது.

No comments:

Post a Comment