சுற்றளவின் அடிப்படையில் தேங்காயின் உச்சபட்ச விலை வர்த்தமானி இரத்து - News View

About Us

About Us

Breaking

Saturday, June 19, 2021

சுற்றளவின் அடிப்படையில் தேங்காயின் உச்சபட்ச விலை வர்த்தமானி இரத்து

சுற்றளவின் அடிப்படையில் தேங்காயின் உச்சபட்ச விலை நிர்ணயம் தொடர்பான அதி விசேட வர்த்தமானியை இரத்து செய்து, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் செப்டெம்பர் 25ஆம் திகதி வெளியிடப்பட்ட 2194/73 எனும் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, தேங்காயின் உச்சபட்ச சில்லறை விலலை, சுற்றளவின் அடிப்படையில் ரூபா 60 முதல் ரூ. 70 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், தேங்காயின் சுற்றளவு
12 அங்குலத்திற்கு குறைவு - ரூ. 60
12 - 13 அங்குலம் - ரூ. 65
13 அங்குலத்திற்கு அதிகம் - ரூ. 70

என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

பாவனையாளர் அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷாந்த திஸாநாயக்கவினால் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment