தியனன்மென் சதுக்க ஒடுக்குமுறை நாளில் முக்கிய சட்டத்தரணியை கைது செய்தது ஹொங்கொங் பொலிஸ் - News View

About Us

About Us

Breaking

Friday, June 4, 2021

தியனன்மென் சதுக்க ஒடுக்குமுறை நாளில் முக்கிய சட்டத்தரணியை கைது செய்தது ஹொங்கொங் பொலிஸ்

தியனன்மென் சதுக்க ஒடுக்குமுறையின் 32 ஆவது ஆண்டு நிறைவில் ஒரு அங்கீகரிக்கப்படாத சட்ட சபையை ஊக்குவித்த குற்றச்சாட்டுக்காக ஒரு முக்கிய சட்டத்தரணியை ஹொங்கொங் பொலிஸார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

1989 ஆம் ஆண்டு தியனன்மென் சதுக்க ஒடுக்குமுறையின் 32 ஆவது நினைவு நாளான இன்று கொவிட்-19 கட்டுப்பாடுகளை மேற்கொள்ளிட்டு, ஹொங்கொங் நகரம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்களுக்கு தடையை அமுல்படுத்த ஆயிரக்கணக்கான அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

இதன்போதே பீஜிங்கின் கொடூரமான ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வருடாந்திர விழிப்புணர்வை ஏற்பாடு செய்யும் ஹொங்கொங் கூட்டணியின் துணைத் தலைவியும் சட்டத்தரணியுமான சாவ் ஹேங் துங் கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்கீகரிக்கப்படாத சட்ட சபையை ஊக்குவித்த குற்றச்சாட்டுக்காக அவர் கைது செய்யப்பட்தாக தெரிவிக்கப்படுகிறது.

பீஜிங்கின் மிருகத்தனமான இராணுவ ஒடுக்குமுறை பற்றிய விவாதம் ஜூன் 3 மாலை முதல் ஜூன் 4, காலை வரை ஹெங்கொங்கின் அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த கால கட்டத்தில் எந்தவொரு "சட்டவிரோத கூட்டங்களையும்" தடுத்து நிறுத்த ஆயிரக்கணக்கான அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறுகின்றனர்.

அதேநேரத்தில் தியனன்மென் சதுக்கத்தில் கூடுபவர்களுக்கு எதிராக ஒரு புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை பயன்படுத்த முடியும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சுமார் 7,000 அதிகாரிகள் நாள் முழுவதும் பணியில் நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி பொது ஆர்.டி.எச்.கே செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment