எம்வி எக்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தினால் உப்பு உற்பத்திக்கு எவ்வித பாதிப்பும் இல்லை - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 1, 2021

எம்வி எக்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தினால் உப்பு உற்பத்திக்கு எவ்வித பாதிப்பும் இல்லை

(எம்.மனோசித்ரா)

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிலிருந்து வெளியாகி இரசாயன பதார்த்தங்களால் உப்பு உற்பத்திக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும் என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிலிருந்து இரசாயனங்கள் வெளியாகியுள்ளமையால் உப்பு உற்பத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் உப்பு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அவ்வாறு உப்பு உற்பத்திக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

உப்பு உற்பத்தி செய்யப்படும் கடற் பிரதேசங்களில் குறித்த கப்பலிலிருந்து வெளியாகிய இரசாயனங்கள் கலக்கவில்லை. எனவே உப்பு உற்பத்தி பாதிக்கப்படாது என்பதோடு , உப்பு பற்றாக்குறையும் ஏற்படவில்லை என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad