பலத்த மழை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கடுவலை நுழைவாயில் நீரில் மூழ்கியுள்ளது.
எனவே கடத்தாவிலிருந்து வரும் இலகுரக வாகனங்கள் கடுவலை வாயிலினூடாக வெளியேற முடியாது என்று வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த வாகனங்கள் தெற்கு அதிகவேக நெடுஞ்சாலையின் அத்துருகிரிய வாயிலூடாக வெளியேறலாம்.
இதேவேளை களனி ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால் அவிசாவளை, சீதாவக்க, பியகம, கொலன்னாவை, களனி, கடுவலை மற்றும் தொட்டலங்க ஆகிய பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.
அதேபோல் அத்தனுகல ஓயாவின் நீர் மட்டமும் உயர்வடைந்துள்ளமையினால் கம்பஹா, மினுவாங்கொட மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளும் வெள்ளப் பெருக்கினை எதிர்நோக்க நேரிடம் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment