சிறுவர்களுக்கு முகக் கவசம் அணிவது குறித்து குழந்தை வைத்தியர் விளக்கம் - News View

Breaking

Post Top Ad

Thursday, June 10, 2021

சிறுவர்களுக்கு முகக் கவசம் அணிவது குறித்து குழந்தை வைத்தியர் விளக்கம்

சிறுவர்களுக்கு முகக் கவசம் அணிவதில் எந்த பிரச்சினையும் இல்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் குழந்தை வைத்தியர் பேராசிரியர் குவனி லியனகே தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

முகக் கவசம் அணிவதைப் போன்று இரு கைகளையும் கழுவி சுத்தம் செய்வதற்கும் அதேபோன்று கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் பெற்றோர்களின் கண்காணிப்பின் கீழ் சிறுவர்களுக்கு முகக் கவசம் அணிவதில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad