மாளிகைக்காடு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு : ஹரீஸ் எம்.பி களவிஜயம் செய்து அடுத்த கட்டம் தொடர்பில் ஆராய்வு : பிரதமர் மஹிந்தவுக்கும் நன்றி தெரிவித்தார் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 19, 2021

மாளிகைக்காடு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு : ஹரீஸ் எம்.பி களவிஜயம் செய்து அடுத்த கட்டம் தொடர்பில் ஆராய்வு : பிரதமர் மஹிந்தவுக்கும் நன்றி தெரிவித்தார்

மாளிகைக்காடு நிருபர்

கடலரிப்பில் ஜனாஸாக்கள் வெளிவந்த காரைதீவு பிரதேச மாளிகைக்காடு மையவாடி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் தடுப்புச்சுவர் அமைக்கும் வேலைத்திட்டம் பிரதமரின் பணிப்புக்கு அமைய அமைக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரைக்கு இணங்க கரையோரம் பேணல் திணைக்களம் முன்னெடுத்த இவ்வேலைத்திட்டத்தின் சகல பணிகளும் பூர்த்தி செய்யப்பட்டு நிர்மாண பணி முடித்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வேலைத்திட்டம் தொடர்பில் பார்வையிட இப்பணியை முன்னின்று முன்னெடுத்த பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய்ந்தார். 

இவ்விஜயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸின் பிரத்யோக செயலாளர் நௌபர் ஏ பாவா,மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் தலைவர், செயலாளர், முக்கிய நிர்வாகிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஊடகங்களுக்கு இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தனது கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கும், கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகளுக்கும், இவ்வேலைத்திட்டத்தை முன்னின்று செய்த சிவில் அமைப்புக்களும் நன்றிகளை தெரிவித்தார். 

மேலும் இவ்வேலைத் திட்டத்தின் அவசரம் உணர்ந்து எங்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்த பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கும் மாளிகைக்காடு மக்கள் சார்பில் அந் நூர் ஜும்மாப்பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் நன்றிகளை தெரிவித்தார்.

No comments:

Post a Comment