வாழைச்சேனையில் சட்டவிதிமுறைகளை மீறி திருமணம் : கலந்து கொண்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 1, 2021

வாழைச்சேனையில் சட்டவிதிமுறைகளை மீறி திருமணம் : கலந்து கொண்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்

எஸ்.எம்.எம்.முர்ஷித் 

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் வாழைச்சேனை நான்காம் வட்டாரத்தில் சட்டவிதிமுறைகளை மீறி திருமணம் நடைபெற்ற தகவலையறிந்து கலந்து கொண்டவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான் தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்று திங்கட்கிழமை கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இவருடம் தொடர்பினை ஏற்படுத்தியவர்கள் விபரம் திரட்டப்படும் போது சட்டவிதிமுறைகளை மீறி நடைபெற்ற திருமணம் கலந்து கொண்டதன் பிரகாரம் கலந்து கொண்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தலுக்கு உள்ளான நபர்கள் அனைவருக்கும் நாளை புதன்கிழமை பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான் தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார வைத்திய அதிகாரிகளால் பி.சி.ஆர். பரிசோதனைகள் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad