அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைக்கும் வியாபாரிகளுக்கு எதிராக வர்த்தமானி வெளியாகும் - அமைசசர் பந்துல - News View

Breaking

Post Top Ad

Friday, June 11, 2021

அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைக்கும் வியாபாரிகளுக்கு எதிராக வர்த்தமானி வெளியாகும் - அமைசசர் பந்துல

(எம்.ஆர்.எம்,வசீம்)

அரிசி, பால்மா உட்பட அத்தியாவசிய பொருட்களை தொகையாக மறைத்து வைத்திருப்பதை தடை செய்து வர்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என வரத்தக அமைசசர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

வர்த்தக அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலு தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடு எதிர்கொண்டு அசாதாரண நிலைமையில் மக்களுக்கு சாதாரண விலையில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

அதற்காக அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்பவர்களும் நுகர்வோரும் பாதிக்காத வகையில் சாதாரண விலையில் பொருட்களை விற்பனை செய்யவும் வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

இருந்தபோதும் ஒருசில வியாபாரிகள் அத்தியாவசிய பொருட்களை களஞ்சியசாலைகளில் பதுக்கி வைத்துக் கொண்டு விலை அதிகரிப்பை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக எமக்கு தகவல் கிடைத்திருக்கின்றது.

அதனால் இந்த நடவடிக்கையை தடுப்பதற்காக, அத்தியாவசிய பொருட்களை தொகையாக வைத்திருக்கும் மொத்த வியாபாரிகள் தங்கள் களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் பொருட்களின் தொகை தொடர்பில் உண்மை தகவல்களை நுகர்வோர் அதிகார சபையில் பதிவு செய்ய வேண்டும் என கருதி வரத்தமானி அறிவிப்பு வெளியிட இருக்கின்றோம்.

அதன் பிரகாரம் அரிசி, பால்மா, கோதுமை, சோளம், சீனி உட்பட அத்தியாவசிய பொருட்களை தொகையாக களஞ்சியப்படுத்தி வியாபாரம் செய்பவர்கள் தங்களிடம் இருக்கும் தொகை தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையில் பதிவுசெய்து கொள்ள வேண்டும். அத்துடன் இந்த வர்த்தமானி அறிவிப்பு விவசாயிகளுக்கு சம்பந்தப்படாது.

No comments:

Post a Comment

Post Bottom Ad