காத்தான்குடியில் மற்றுமொரு கொவிட் மரணம் : இன்று மாத்திரம் மூன்று பேர் - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 1, 2021

காத்தான்குடியில் மற்றுமொரு கொவிட் மரணம் : இன்று மாத்திரம் மூன்று பேர்

காத்தான்குடியைச் சேர்ந்த மற்றுமொருவர் சற்றுமுன் கொவிட் தொற்றினால் மட்டு போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். இவர் 68 வயதுடைய சிறுநீரக நோயாளியாகும்.

இன்று செவ்வாய்க்கிழமை (1) ஒரு பெண் உட்பட மூவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொவிட் தொற்று காரணமாக இதுவரை காத்தான்குடியில் இரு பெண் உட்பட 10 பேர் மரணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் நாம் மிக அவதானமாக நடந்து கொள்வதுடன் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை ஏற்று நடந்து கொள்ள வேண்டும். அவசியமில்லாமல் வீடுகளை விட்டு வெளியில் .வரக்கூடாது.

எம் எஸ் எம் நூர்தீன்

No comments:

Post a Comment

Post Bottom Ad