தனிமைப்படுத்தப்பட்டுள்ள மீராவோடை, மாஞ்சோலைக் கிராமங்கள் : உதவிக் கரத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ள மீரா ஜும்ஆ பள்ளிவாயல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 15, 2021

தனிமைப்படுத்தப்பட்டுள்ள மீராவோடை, மாஞ்சோலைக் கிராமங்கள் : உதவிக் கரத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ள மீரா ஜும்ஆ பள்ளிவாயல்

ஓட்டமாவடி நிருபர் அ.ச.மு சதீக்

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியான மீராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, மாஞ்சோலை போன்ற கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து பொதுமக்கள் அரச அதிகாரிகள் மற்றும் அரச நிறுவனங்களின் மீது பல்வேறு விமர்சனங்களையும் விசனங்களையும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர் .

ஏற்கனவே பயணத்தடை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டிருந்தாலும் கூலித்தொழில் செய்பவர்கள் விவசாயிகள், மீனவர்கள் போன்றவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தங்களது தொழில்களை செய்து வந்தனர். 

ஆனால் இப்பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டதனை தொடர்ந்து மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் இது ஓர் திட்டமிட்ட சதி எனவும் இப்பிரதேசம் தனிமைப்படுதப்படுவதற்கு முன் பொதுமக்களின் அடிப்படை தேவைகளான உணவு, சுகாதார, தொழில்துறை தொடர்பாக பூர்த்தி செய்ய எந்த வழியிலும் அரச நிறுவனங்களினால் திட்டமிடப்படவில்லை எனவும் மற்றும் இதனை விட கொரோனா தொற்று மற்றும் மரணங்கள் அதிகமாக உள்ள கிராம சேவையாளர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இவ்வாறான பொதுமக்களின் விமர்சனங்களும் விசனங்களும் பொதுநிறுவனங்கள் மற்றும் இப்பிரதேசத்திலுள்ள அரச நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் விளையாட்டு கழகங்களின் மீது பல்வேறு அழுத்தங்களை பொதுமக்கள் செலுத்தி வருகின்றனர்.

இந்த விடயங்களை கவனத்திற்கொண்ட மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் மக்களுக்கு உயிர்வாழ்வதற்கான தேவையான உணவுத்தேவை மற்றும் கஸ்டப்படும் மக்களுக்கு பொருத்தமான தேவைகளை பூரத்தி செய்தவற்கு பொதுமக்களிடமிருந்து அல்லது இப்பிரதேச தனவந்தர்களிடமிருந்து உதவிகளை எதிர்பார்த்து நிற்கின்றது. 

அந்த அடிப்படையில் ஏதேயினும் உதவிகளை இறைவனுக்காக இப்பிரதேசத்திற்கு செய்யவுள்ளவர்கள் மீராவேடை மீரா ஜும்ஆ பள்ளிவாயல் நிறுவாகத்தினை தொடர்பு கொள்ள பின்வரும் தொலைபேசி இலக்கங்களை அழைக்குமாறு வேண்டப்படுகின்றனர். 

அத்துடன் பண உதவிகள் செய்ய உள்ளவர்கள் மீரா ஜும்ஆ பள்ளிவாயலின் அமானா வங்கி மற்றும் மக்கள் வங்கி கணக்குகளில் வைப்பிடுலிமாறு வேண்டப்படுகின்றனர்.

தொலைபேசி இலக்கங்கள்
மீரா ஜும்ஆ பள்ளவாயலின் தலைவர் :0777307874
மீரா ஜும்ஆ பள்ளவாயலின் செயலாளர் :0779988011
மீரா ஜும்ஆ பள்ளவாயலின் பொருளாளர்:0777950951

வங்கி கணக்கு இலக்கங்கள்
அமானா வங்கி :
0100090002001
மக்கள் வங்கி 10210010000233 

No comments:

Post a Comment