பயணக்கட்டுப்பாடு மேலும் சில காலம் நீடிக்க வாய்ப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, June 14, 2021

பயணக்கட்டுப்பாடு மேலும் சில காலம் நீடிக்க வாய்ப்பு

கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை இன்னும் சில காலத்துக்கு நீடிக்கக்கூடிய வாய்ப்புள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

விசேட வைத்திய நிபுணர்களின் தீர்மானங்களுக்கமையவே பயணத் தடையை தொடர்வதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படுமென அவர் கூறினார்.

பயணத் தடையின் காரணமாக கொரோனா மரணங்களும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிந்தாலும், மரணங்கள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய மாற்றமொன்று ஏற்படவில்லையென இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே, பயணத் தடையை மேலும் சில நாட்களுக்கு நீடிப்பது என்ற தீர்மானமே தற்போதைக்கு இருப்பதாகவும் தினமும் இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் விசேட வைத்திய நிபுணர்களின் தீர்மானங்களுக்கமையவே தீர்மானங்கள் எடுக்கப்படுமெனவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment