மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியினால் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான விசாரணைகளை நிறைவுக்கு கொண்டுவந்துள்ளதாக உயர்நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 09 ஆம் திகதி (ஷரீஆ சட்டம் தொடர்பில்) அசாத் சாலி சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் கொள்ளுப்பிட்டியில் கடந்த மார்ச் 16 ஆம்திகதி தனது வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது பங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், இவர் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, அவரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் விசாரணைகளை நிறைவுக்கு கொண்டுவந்துள்ளதாக சட்டமா அதிபர் உயர்நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment