அரசை வலியுறுத்த எவருக்கும் அதிகாரமில்லை, பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்வதா? இல்லையா? எமது பாராளுமன்றமே தீர்மானிக்கும் - சரத் வீரசேகர - News View

About Us

About Us

Breaking

Monday, June 14, 2021

அரசை வலியுறுத்த எவருக்கும் அதிகாரமில்லை, பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்வதா? இல்லையா? எமது பாராளுமன்றமே தீர்மானிக்கும் - சரத் வீரசேகர

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் இலங்கை பாராளுமன்றமே தீர்மானிக்கும். அதனை வேறு எவரும் தீர்மானிக்க முடியாதென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும். இல்லாவிடின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை இரத்துச் செய்ய வேண்டுமென்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடன் இரத்துச் செய்ய வேண்டுமென்று அரசை வலியுறுத்துவதற்கு ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment