அமெரிக்காவில் மேலும் ஒரு கொரோனா தடுப்பூசி தயாரிப்பு : 90.4 சதவீதம் செயற்திறன் கொண்டதென தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, June 14, 2021

அமெரிக்காவில் மேலும் ஒரு கொரோனா தடுப்பூசி தயாரிப்பு : 90.4 சதவீதம் செயற்திறன் கொண்டதென தெரிவிப்பு

அமெரிக்காவில் Pfizer, Moderna, Johnson & Johnson ஆகிய மூன்று கொரோனா தடுப்பூசிகள் அவசரகால பாவனையில் உள்ளது. இந்நிலைவில், Novavax என்ற நிறுவனம் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த தடுப்பூசி 100 சதவீதம் பாதுகாப்பானது என்றும் 90.4 சதவீதம் செயற்திறன் கொண்டது என்றும் உருமாறிய கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக செயற்படுகிறது எனவும் Novavax நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் தடுப்பூசிக்கான தேவை பலமடங்கு குறைந்துள்ளது. ஏற்கனவே அங்கு கொரோனா தடுப்பூசிகள் கோடிக்கணக்கில் காலாவதி திகதியை அண்மித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசிக்கு பாரிய கேள்வி நிலவுகிறது.

எனவே, அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு சபையின் அனுமதி கிடைத்தவுடன், வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதனை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியை இருப்பு வைப்பதும் எடுத்து செல்வதும் சுலபம் எனவும் நோவாவேக்ஸ் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் Serum நிறுவனம் தயாரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அனுமதி கிடைத்துவிடும் எனவும் காலாண்டு இறுதியில் மாதத்திற்கு 10 கோடி டோஸ்களையும், ஆண்டு இறுதி காலண்டிற்குள் மாதத்திற்கு 15 கோடி டோஸ்களையும் தயாரிக்க முடியும் என்றும் Novavax நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment