சிங்கிள் டோஸ் கொண்ட ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி 83.7 சதவீதம் செயல்திறன் மிக்கது : ரஷிய நிறுவனம் அறிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, June 2, 2021

சிங்கிள் டோஸ் கொண்ட ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி 83.7 சதவீதம் செயல்திறன் மிக்கது : ரஷிய நிறுவனம் அறிவிப்பு

சிங்கிள் டோஸ் கொண்ட ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி 83.7 சதவீதம் செயல்திறன் மிக்கது என ரஷிய நிறுவனம் அறிவித்துள்ளது. 

உலகம் முழுவதும் தற்போது பயன்பாட்டில் இருந்து வரும் கொரோனா தடுப்பூசிகள் இரண்டு டோஸ் கொண்டதாக உள்ளது.

கொரோனா வைரஸ்க்கு எதிராக உலகளவில் பைசர் (அமெரிக்கா), மொடர்னா (அமெரிக்கா), அஸ்ட்ராஜெனேகா (இங்கிலாந்து), ஸ்புட்னிக் வி (ரஷியா), கோவேக்சின் (இந்தியா), சீனோபார்ம் (சீனா), சீனோவேக்- கொரோனாவேக் (சீனா) ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

இந்த ஏழு தடுப்பூசிகளும் இரண்டு முறை செலுத்திக் கொள்ள வேண்டும். முதல் டோஸ் செலுத்திய குறிப்பிட்ட நாட்கள் கழித்து 2 ஆவது டோஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ரஷிய நிறுவனம் ஒரு டோஸ் செலுத்தினால் போதும் வகையில், ஸ்புட்னிக் லைட் என்ற தடுப்பூசியை தயாரிக்கும் முயற்சியில் களம் இறங்கியது. தடுப்பூசியை உருவாக்கு மூத்த குடிமக்களுக்கு மருத்துவ அளவில் பரிசோதனை மேற்கொண்டது. இதில் 78.6 முதல் 83.7 சதவீதம் வரை செயல்திறன் மிக்கதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

60 வயது முதல் 79 வயது வரையிலான 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை செலுத்தி பரிசோதித்துள்ளது. 21 மற்றும் 40 ஆவது நாளில் பாதிப்பு ஏற்பட்ட சதவீதம் 0.446 ஆக இருந்துள்ளது. 

அதேவேளையில் தடுப்பூசி செலுத்தாதவர்களுகளில் 2.74 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை அடிப்படையாக வைத்து 78.6 முதல் 83.7 சதவீதம் வரை செயல்திறன் மிக்கதாக ரஷியா தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad