வீட்டுச் சூழலை சுத்தப்படுத்தினால் 5000 ரூபா பரிசு - News View

Breaking

Post Top Ad

Friday, June 4, 2021

வீட்டுச் சூழலை சுத்தப்படுத்தினால் 5000 ரூபா பரிசு

நாளை (5) உலக சுற்றாடல் தினம் என்பதனால், எல்லா வீடுகளிலும் நாளை (5) மற்றும் நாளை மறுநாள் (6) டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டங்களை மேற்கொள்ளுமாறு சுற்றாடல் அமைச்சு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

தற்போது நாட்டில் நிலவுகின்ற கொரோனோ தொற்று பரவல் காரணமாக, சுற்றாடல் தின நிகழ்வுகள் கொண்டாடப்படமாட்டாது என்றும், அனைத்து வீடுகளிலும் டெங்கு நுளம்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இம்மாதம் 5ஆம் திகதி மற்றும் 6 ஆம் திகதிகளில் தமது வீட்டுச் சூழலை சுத்தப்படுத்தும் முறையை வீடியோ செய்து சுற்றாடல் அமைச்சுக்கு அனுப்புமாறு பாடசாலை மாணவர்களைக் கேட்டுக் கொள்வதாகவும், இந்த இரண்டு நாட்களில் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கு ஒருமுறை 3 குடும்பங்களை தெரிவுசெய்து ரூ. 5000 வீதம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad