ஒட்சிசன் ஆலை நிர்மாணிக்க லிட்ரோ கேஸ் நிறுவனம் தீர்மானம் : கெரவலப்பிட்டியில் 25 ஏக்கர் காணி ஒதுக்கீடு - News View

About Us

About Us

Breaking

Thursday, June 3, 2021

ஒட்சிசன் ஆலை நிர்மாணிக்க லிட்ரோ கேஸ் நிறுவனம் தீர்மானம் : கெரவலப்பிட்டியில் 25 ஏக்கர் காணி ஒதுக்கீடு

கொவிட்19 தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கான ஒட்சிசன் தேவையை நிவர்த்தி செய்ய லிற்றோ கேஸ் நிறுவனம் கெரவலப்பிட்டியில் 25 ஏக்கர் காணியில் ஒட்சிசன் ஆலையை நிர்மாணிக்கவுள்ளது.

கொவிட்-19 பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒட்சிசனின் தேவை அதிகரித்து வருவதால், ஒட்சிசனின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான தேவை குறித்து ஜனாதிபதி செயலணியினருக்கு சுகாதார துறையினர் அறிவித்துள்ளனர்.

தற்போதைய தேவையான 90 மெட்ரிக் தொன் ஒட்சிசனை, அதனை வழங்கும் நிறுவனங்களால் ஈடு செய்ய முடிகிறது. எவ்வாறாயினும், பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்கவும் ஒட்சிசனை தடையின்றி விநியோகிக்குமாறும் லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்படி, 25 ஏக்கர் காணியானது காணி மேம்பாட்டு கூட்டுத்தாபனத்திடமிருந்து பெறப்பட்டுள்ளது. இக்காணியை வாங்குவதற்கான ஒப்பந்தம் லிட்ரோ கேஸ் லங்கா மற்றும் காணி மேம்பாட்டுக் கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கு இடையே நேற்று (02) திகதி கைச்சாடப்பட்டது.

கெரவலப்பிட்டியில் 25 ஏக்கர் காணியில் நவீன இந்த உற்பத்தி ஆலை மற்றும் விநியோக வலையமைப்பு நிர்மாணிக்கப்படும் .இலங்கையின் தேசிய எல்பிஜி வழங்குநராக லிட்ரோ கேஸ் லங்கா, ஜனாதிபதி செயலணியின் உதவியுடன் தேசிய அளவில் முக்கியமான இந்த முயற்சியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment