கொவிட்-19 க்கு எதிராக மாநகர சபை முன்னெடுத்து வருகின்ற தடுப்பூசி ஏற்றும் முயற்சிக்கு ஆதரவாக, தடுப்பூசி ஏற்றும் மையங்களின் பாவனைக்காக 20 மடிக்கணினிகளை கொழும்பு துறைமுக நகரம் நன்கொடையாக வழங்கியுள்ளது.
கொழும்பு மாநகர சபையில் 17 அன்று கொழும்பு மாநகர சபை முதல்வரான ரோஸி சேனநாயக்கவிடம் இந்த மடிக்கணினிகளை CHEC Port City Colombo இன் முகாமைத்துவப் பணிப்பாளரான திரு ஜியாங் ஹெளலியாங் கையளித்துள்ளார்.
உலகளாவில் பரவி வருகின்ற தொற்றுநோயை எதிர்த்து நாடு போராடி வரும் இந்த சவாலான காலகட்டங்களில் கொழும்பு துறைமுக நகரத்தின் பரோபகார சமிக்ஞையை முதல்வர் மிகவும் பாராட்டினார்.
கொழும்பு மாநகர சபையில் தடுப்பூசி ஏற்றும் திட்டத்தில் ஈடுபட்டுள்ள கொழும்பு மாநகர சபை அதிகாரிகளுக்கு மடிக்கணினிகள் அவசியமான ஒரு தேவை என்று அவர் கூறினார்.
ஏப்ரல் மாதத்தில் உள்ளூர் மற்றும் சீன ஊழியர்களுக்காக கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் இடம்பெற்ற தடுப்பூசி ஏற்றும் திட்டத்திற்கான உதவி மற்றும் வழிகாட்டுதலுக்காக முதல்வர் மற்றும் அவரது பணியாளர்களுக்கு திரு ஜியாங் ஹெளலியாங் நன்றி தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபையின் தலைமை மருத்துவ அதிகாரியான வைத்தியர் ருவான் விஜேமுனி இந்த கையளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டதுடன், சினோஃபார்ம் தடுப்பூசியைப் பயன்படுத்தி தடுப்பூசியை ஏற்றும் கொழும்பு மாநகர சபையின் செயற்திட்டம் தற்போது நடைபெற்று வருவதுடன், இது முழு கொழும்பு பெருநகரத்தையும் உள்ளடக்கியுள்ளது. தடுப்பூசி ஏற்றும் மையங்களில் புள்ளி விபரங்களைச் சேகரிக்கும் செயல்முறை முக்கியமானது என்றும், இந்த செயல்முறையை சீராக்க நன்கொடையளிக்கப்பட்ட கணினிகளை அதிகாரிகள் இப்போது பயன்படுத்த முடிகிறது என்றும் அவர் கூறினார்.
மாநகர ஆணையாளரான திருமதி ரொஷானி திசாநாயக்க, கொழும்பு துறைமுக நகரத்தின் வெகுசன தொடர்புகளுக்கான தலைமை அதிகாரியான திரு. கச்சப செனரத் மற்றும் ஆதன கட்டுமானத்திற்கான முகாமையாளரான திரு. ஷாலக விஜயரத்ன ஆகியோர் இந்த நன்கொடை நிகழ்வில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment