பொலிஸாரின் விடுமுறை இரத்து தொடர்ந்தும் நீடிப்பு - News View

Breaking

Post Top Ad

Monday, May 31, 2021

பொலிஸாரின் விடுமுறை இரத்து தொடர்ந்தும் நீடிப்பு

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விடுமுறை இரத்து, எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்கப்படுவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்று பரவல், தனிமைப்படுத்தல் சட்டங்களை முறையாகப் பேணுதல், பயணக்கட்டுப்பாடு போன்றன அமுலில் உள்ளதன் காரணமாக, பெருமளவிலான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த மே 11 முதல் மே 31 வரை நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் விடுமுறை இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad