வவுனியாவில் வீதியோரம் வீசப்பட்ட காசோலைகள் - News View

About Us

About Us

Breaking

Friday, May 14, 2021

வவுனியாவில் வீதியோரம் வீசப்பட்ட காசோலைகள்

வவுனியா - யாழ் வீதியில் பல வங்கிகளின் காசோலைகள் வீதியோரங்களில் இன்று (14) காலை வீசப்பட்டிருந்ததை காணமுடிந்தது.

2014 ஆம் ஆண்டுக்குரிய குறித்த காசோலைகள் பல வங்கிகளுக்குரியதாக காணப்பட்டதுடன் அவை அரச திணைக்களங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்குரியதாகவும் காணப்பட்டது.

அதிகளவான காசோலைகள் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த வங்கிக் கிளைகளினுடையதாக காணப்படுவதனால் குறித்த காசோலைகள் ஏதற்காக இவ்வாறு வவுனியா பகுதியில் வீசப்பட்டுள்ளதென்ற கேள்வி அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளதுடன் சந்தேகத்தையும் வெளியிட்டுள்ளனர்.

வவுனியா தீபன்

No comments:

Post a Comment