வடக்கு மாகாணத்தில் மேலும் 60 பேருக்கு கொரோனா - வவுனியாவில் ஒருவர் உயிரிழப்பு! - News View

About Us

About Us

Breaking

Friday, May 14, 2021

வடக்கு மாகாணத்தில் மேலும் 60 பேருக்கு கொரோனா - வவுனியாவில் ஒருவர் உயிரிழப்பு!

வடக்கு மாகாணத்தில் மேலும் 60 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடம் ஆகியவற்றில் 585 பேரின் மாதிரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 48 பேருக்கும் முல்லைத்தீவில் ஒருவருக்கும் கிளிநொச்சியில் இருவருக்கும் வவுனியாவில் ஒன்பது பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்ட ஏழு பேருக்கும் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் 40 பேருக்கும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒருவருக்கும் என 48 பேருக்குக் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதில், சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொடிகாமம் சந்தை மற்றும் கடைத் தொகுதியில் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்புடைய 24 பேருக்குத் தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், முல்லைத்தீவு வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்குத் தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், கிளிநொச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஏற்கனவே தொற்றுக் கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்புடைய இருவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட இருவருக்குத் தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளதுடன் வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தலில் இருந்த ஆறு பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாக மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலையின் கொரோனா தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த வயோதிபப் பெண்ணொருவரே இவ்வாறு இன்று (வெள்ளிக்கிழமை) மரணமடைந்துள்ளார்.

குறித்த பெண்மணி நேற்று சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்ரிஜென் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

No comments:

Post a Comment