மலேசியாவில் நாடு தழுவிய ரீதியில் நாளை முதல் ஊரடங்கு அமுல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 11, 2021

மலேசியாவில் நாடு தழுவிய ரீதியில் நாளை முதல் ஊரடங்கு அமுல்

கொரோனா வைரஸ் தொற்றுக்கள் மற்றும் புதிய வகை வைரஸ்கள் அதிகரித்து வருவதால் மலேசியாவில் நாடு தழுவிய ரீதியில் நாளை புதன்கிழமை முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுத்தப்படுகிறது.

ஊரடங்கு ரமழான் பண்டிகைக்கு சற்று முன்னதாகவே அமுல்படுத்தப்பட்டுகிறது.

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் அதிகரித்தள்ளது. இது ஒரு தேசிய நெருக்கடியைத் தூண்டக்கூடும். இந்நிலையில், நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு ஜூன் 7 வரை தொடரும் என பிரதமர் முஹைதீன் தெரிவித்துள்ளார்,

மேலும், ஒன்றுக்கூடல், மாநிலங்களுக்கிடையேயான மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான அனைத்து பயணங்களும் தடை செய்யப்படும். கல்வி நிறுவனங்கள் மூடப்படும், ஆனால் பொருளாதாரத் துறைகள் அனுமதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரங்களில் மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை 3,807 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மலேசியாவில் கொரோானா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 444,484 ஆகும். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700 ஆகும்.

No comments:

Post a Comment