அண்மைக் காலமாக எமது பகுதிகளில் வேகமாக பரவி வரும் கொரோணா நோய் நிலைமைகள் பற்றி ஆராயும் விசேட கூட்டம் (27) ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கொரோணா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப கட்ட சிகிச்சை அளிப்பதற்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் பிரத்தியேகமாக இடம் ஒன்றை உடனடியாக ஏற்பாடு செய்து நான்கு கட்டில்களை முதற்கட்டமாக ஏற்படுத்தி கொடுப்பதை துரிதப்படுத்துவதுடன் தொற்றாளர்களின் தொகை வேகமாக அதிகரிக்கும் பட்ஷத்தில் மேலும் 15 ற்கும் 20 ற்கும் இடைப்பட்ட கட்டில்களை ஏற்பாடு செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் பொதுமக்களுக்கு இந்நோய் தொடர்பாக விழிப்புணர்வை வழங்கும் முகமாக ஏறாவூர் பொலிஸாரினால் வீதி பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஒலிபெருக்கி வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் போன்ற விடயங்கள் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்திற்கு ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜுத், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி சாபிறா வசீம், ஏறாவூர் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் திருமதி தயாளினி, ஏறாவூர் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஸிஹானா, ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி HWK ஜெயந்த ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment