அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ள எல்லை நிர்ணயத்தில் ஏறாவூரின் எல்லையை எவ்வாறு வரையறுத்துக் கொள்வது தொடர்பான கூட்டம் நேற்று ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான ஹாபிஸ் நசீர் அகமட் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஏறாவூரின் எல்லை நிர்ணயம் தொடர்பில் ஏறாவூர் பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத்தினால் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவொன்று கலந்துரையாடப்பட்டது.
மேலும் ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் தயாரிக்கப்பட்ட ஒரு முன்மொழிவு அவர்களினால் பாராளுமன்ற உறுப்பினருக்கு முன்வைப்புச் செய்யப்பட்டு சம்மேளனத் தலைவர் எம்.எம்.முகைதீன் அதிபரினால் கையளிக்கப்பட்டு அங்கு கலந்துரையாடப்பட்டது.
அதனோடு இணைந்து ஏறாவூர் பற்று எல்லையை எவ்வாறு நிர்ணயித்து நிர்வாக அலகை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் ஒரு முன்மொழிவு அத்தருணத்தில் பாராளுமன்ற உறுப்பினரிடம் சமர்ப்பித்து அங்கு கலந்துரையாடப்பட்டது.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் தற்போது இருக்கின்ற நிர்வாக அலகு பிரிப்பில் கடந்த காலங்களில் எல்லைப் பிரிப்பில் இழைக்கப்பட்டுள்ள அநீதிகளை சம்மேளனம் சார்பாக உரிய அதிகாரிகளுக்கு எழுத்திலோ நேரடியாகவோ கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டும என்று கேட்டுக் கொண்டார்.
அரசியல் மட்டத்தில் தன்னால் செய்ய முடியுமான பங்களிப்பை வழங்குவேன் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அகமட் கூறினார்.
எனவே எதிர்வரும் காலங்களில் இது தொடர்பில் அமைக்கப்படவுள்ள ஆணைக்குழுவில் இதனை மிகச் சரியான புள்ளிவிபரங்களுடன் ஒப்பீட்டு ரீதியாகவும் விஞ்ஞான பூர்வமாகவும் இதனை முன்வைத்து எமது எல்லை நிர்ணயத்தை பெற்றுக் கொள்ள எல்லோரும் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத், உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சிஹானா, ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனப் தலைவர் எம்.எம். முகைதின், செயலாளர் சட்டத்தரணி முனீர், ஏறாவூர் நகரசபை செயலாளர் ஷியாஉல் ஹக், மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்த கொண்டு தங்களது கருத்தினை முன்வைத்தனர்.
No comments:
Post a Comment