நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து இன்று (11) நள்ளிரவு முதல் எதிர்வரும் மே 30ஆம் திகதி வரை அமுலுக்கு வரும் நிலையில், குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உரிய பாதுகாப்பு கடமைகளை மேற்கொள்ளும் வகையில், பொலிஸார் அதிகளவில் கடமையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஆயினும் கொவிட்-19 தொற்று அதிகளவில் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் விடுமுறையில் உள்ள பொலிஸார் கடமைக்கு திரும்புவது தொடர்பில் உரிய சுகாதார வழிகாட்டலின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment