கொள்ளுப்பிட்டியில் தப்பிச் சென்ற கொவிட் தொற்றாளர் கைது - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 26, 2021

கொள்ளுப்பிட்டியில் தப்பிச் சென்ற கொவிட் தொற்றாளர் கைது

கொவிட்-19 தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில், கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்ற நபர், தமண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (25) பிற்பகல் இவ்வாறு தப்பிச் சென்ற குறித்த நபர், அம்பாறை, வரிப்பத்தான்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த நபர் தற்போது பாலமுனை கொவிட்-19 சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சிகிச்சைகளைத் தொடர்ந்து, தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் குறித்த நபர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad