ஹவுத்தி பேராராளிகளின் ட்ரோன் தாக்குதலை தடுத்து நிறுத்திய சவுதி அரேபிய வான் பாதுகாப்பு படை - News View

About Us

About Us

Breaking

Monday, May 31, 2021

ஹவுத்தி பேராராளிகளின் ட்ரோன் தாக்குதலை தடுத்து நிறுத்திய சவுதி அரேபிய வான் பாதுகாப்பு படை

சவுதி அரேபியாவை நோக்கி யேமனின் ஹவுத்தி பேராராளிகள் சனிக்கிழமை பிற்பகுதியில் ஏவப்பட்ட வெடிபெருட்கள் நிறைந்த ட்ரோனை வான் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியதாக சவுதி அரேபிய அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தெரிவித்துள்ளது.

யேமனின் எல்லையை அண்மித்த சவுதி அரேபியாவின் தெற்கு பகுதியான காமிஸ் முஷாய்டில் அமைந்துள்ள கிங் காலித் இராணுவ விமான தளத்தை இலக்காக இந்த ட்ரோன்கள் ஏவப்பட்டதாக அரசு தொலைக்காட்சியான அல்-எக்பாரியா ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

சவுதி அரேபியாவுக்கு எதிராக ஈரான் ஆதரவுடைய ஹவுதி போராளிகள் மேற்கொண்ட தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இது அண்மையது ஆகும்.

யேமன் ஜனாதிபதி அப்த்ராபு மன்சூர் ஹாடி தலைமையிலான அரசாங்கப் படைகளுக்கும், ஹவுதி போராளிகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நடந்து வரும் ஆயுத மோதலுடன் யேமன் போராடி வருகிறது.

சவுதி தலைமையிலான கூட்டணி 2015 இல் ஹவுத்திகளுக்கு எதிராக ஒரு வான்வழி பிரச்சாரத்தை ஆரம்பித்த பின்னர் நிலைமை மேலும் சிக்கலானது.

இதையொட்டி சவுதி பிரதேசத்தில் ஏவுகணைகள் மற்றும் குண்டுவீச்சு ட்ரோன்களை வீசுவதன் மூலம் ஹவுத்திகள் பெரும்பாலும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment