சீன தடுப்பூசி பாதுகாப்பானது - உறுதிபடுத்தியது உலக சுகாதார நிறுவனம் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 13, 2021

சீன தடுப்பூசி பாதுகாப்பானது - உறுதிபடுத்தியது உலக சுகாதார நிறுவனம்

சீனாவில் கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ள சைனோபார்ம் தடுப்பூசி பாதுகாப்பானது என உலக சுகாதார நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.

இது குறித்து ஜெனீவாவில் உலக சுகாதார நிறுவனத்தின் உதவி தலைமை இயக்குனர் மரிய ஏஞ்சலா சிமாவோ நிருபர்களிடம் கூறியபோது, “கடுமையான கொரோனாவுக்கு எதிரான செயல் திறன் மிக்கது சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசி என்பதற்கு எங்களிடம் ஆதரவு உள்ளது.

இந்த தடுப்பூசி உலகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 6 கோடியே 20 லட்சம் டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது பாதுகாப்பானது. செயல்திறன் மிக்கது” என்பதை நான் குறிப்பிடுகிறேன் என்றார்.

இந்நிலையில், கடந்த வாரம் இந்த தடுப்பூசியின் அவசர பயன்பாட்டு அனுமதியை உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment