அளவுக்கு அதிகமாக கொவிட் தடுப்பூசி போடப்பட்டவர் தீவிர கண்காணிப்பில் - News View

About Us

About Us

Breaking

Friday, May 14, 2021

அளவுக்கு அதிகமாக கொவிட் தடுப்பூசி போடப்பட்டவர் தீவிர கண்காணிப்பில்

இத்தாலியில் 23 வயது பெண் ஒருவருக்கு தவறுதலாக ஆறு டோஸ் அளவு பைசர் நிறுவனத்தின் கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் அந்த மாணவிக்கு காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் ‘பேரசிட்டமொல்’ உள்ளிட்ட மருந்துகள் கொடுக்கப்பட்டது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மாணவிக்கு ஒரு டோஸ் அளவுக்குப் பதிலாக முழு குப்பி அளவு தடுப்பூசி மருந்தை தாதி தவறாக செலுத்திவிட்டார். 

இத்தாலியின் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் இந்தச் சம்பவம் பற்றி தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜெர்மனி, இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் அளவுக்கு அதிகமாக பைசர் தடுப்பூசி போடப்பட்டதாக முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

No comments:

Post a Comment