கஞ்சா வியாபாத்தில் ஈடுபட்ட 22 வயது இளைஞர் மட்டக்களப்பில் கைது - News View

About Us

About Us

Breaking

Friday, May 14, 2021

கஞ்சா வியாபாத்தில் ஈடுபட்ட 22 வயது இளைஞர் மட்டக்களப்பில் கைது

பயணத்தடையின் போது மட்டக்களப்பு கருவப்பங்கேணி பிரதேசத்தில் கஞ்சா வியாபாத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவரை 58 கிராம் கேரள கஞ்சாவுடன் இன்று வெள்ளிக்கிழமை (14) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கு அமைய மாவட்ட குற்ற விசாரனைப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் சம்பவதினமான இன்று மாலை கருவப்பங்கேணி பிரதேசத்திலுள்ள குறித்த வீடு ஒன்றினை முற்றுகையிட்டனர்.

இதன்போது புதூர் பிரதேசத்தில் இருந்து கஞ்சாவை கொண்டு சென்று வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்ததுடன் சிறு பக்கட்டுக்களாக விற்பனைக்காக பொதி செய்யப்பட்ட 58 கிராம் கேரள கஞ்சா, 2,350 ரூபா பணம் கையடக்க தெலைபேசி என்பனவற்றை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் புதூரைச் சேர்ந்த 22 வயதுடையவர் எனவும் இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment