திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபால் அப்பகுதியில் கொவிட் பணிகளில் ஈடுபடும் மூன்று நிறுவனங்களுக்கு அவரின் சொந்த நிதி 175000.00 ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டது.
இதன்படி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கிண்ணியா கிளையின் அனர்த்த நிதியத்துக்கு 75000.00 உம் AL-MABARRA CHARITY FUND ORGANIZATION க்கு 50000.00 உம் இன்று காலை வழங்கப்பட்ட்து.
இது தவிர திருகோணமலை வைத்தியசாலையின் ஜனாஸா தொடர்பான நலன்புரி அமைப்பொன்றுக்கு 50000.00 உம் வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இந்நிதியுதவி தவிர கொவிட் மற்றும் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான பௌதீக, பொருளாதார உதவிகளை செய்து வருகிறோம்.
மேலதிக உதவிகளை பெற தேவையான முயற்சிகளும் நடைபெறுகின்றன. அவை வெற்றி பெற இறைவனை பிராத்திக்கிறேன். உங்களால் முடிந்த உதவிகளை நீங்களும் வழங்குங்கள் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment