வவுனியாவில் சாரதிக்கு கொரோனா : ஏனையோருக்கும் பிசீஆர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 5, 2021

வவுனியாவில் சாரதிக்கு கொரோனா : ஏனையோருக்கும் பிசீஆர்

வவுனியாவில் நோயாளர் காவு வண்டி சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அவருடன் தொடர்பைப் பேணிய சுகாதார துறையினருக்கு பிசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் நேற்று (04) இந்த பிசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன

குறித்த, நோயாளர் காவு வண்டி சாரதி அண்மையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை தெரிய வந்தது.

இதையடுத்து, அலுவலகத்தில் கடமையாற்றியோர், தொடர்பை பேணியோர் என சுகாதார துறையினரிடம் பிசீஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

அந்த வகையில் அவருடன் பணியாற்றிய சாரதிகள், உத்தியோகத்தர்கள், தாதியர்கள் என 13 பேரிடம் பிசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

(வவுனியா விசேட நிருபர்)

No comments:

Post a Comment