கொத்மலை நீர்த் தேக்கத்திற்கு அருகே நடு வீதியில் திடீரென தோன்றிய பாரிய குழி - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 26, 2021

கொத்மலை நீர்த் தேக்கத்திற்கு அருகே நடு வீதியில் திடீரென தோன்றிய பாரிய குழி

கம்பளை கொத்மலை நீர்த் தேக்கத்துக்கு அருகிலுள்ள வீதியில் நேற்றிரவு (25) திடீரென பாரியதொரு குழி ஏற்பட்டுள்ளது.

குறித்த வீதியில் ஏற்பட்பட்ட தாழிறக்கத்தால் நீர்த் தேக்கத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

நாவலப்பிட்டி - ஹரங்கல வீதி தாழிறக்கியுள்ளமை குறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி இயக்குநர், இராணுவம், பொலிஸ், வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை ஆகியோரின் ஆலோசனையின் பேரில், நீர்த் தேக்கத்தின் தலைமை பொறியியலாளரினால் ஆய்வு நடத்தப்பட்டது.

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் கொத்மலை நீர்த் தேக்கத்திற்கு பொறுப்பான தலைமை பொறியியலாளர் கொத்மலை நீர்த் தேக்கத்தில் எந்த சேதமும் பாதிப்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

வீதியில் ஏற்பட்பட்ட தாழிறக்கத்தை சரி செய்ய மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, இராணுவம், பொலிஸ் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஒன்றிணைந்து செயல்படுகிறது.

நாவலப்பிட்டி - ஹரங்கல வீதி தற்போது மூடப்பட்டுள்ளதோடு, மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்படக்கூடிய ஆபத்து நிலைமை குறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அவதானத்துடன் உள்ளது.

அத்தோடு, ஏதேனும் ஆபத்து அறிகுறிகள் காணப்பட்டால், 117 என்ற தொ எண்ணுக்கு தெரிவிக்கமாறு பொது மக்களைக் கோரியுள்ளது.

No comments:

Post a Comment