மன்னார் மாவட்டத்தில் 16 குடும்பங்கள் பாதிப்பு - 13 வீடுகள், 2 சிறிய கடைகள் சேதம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 26, 2021

மன்னார் மாவட்டத்தில் 16 குடும்பங்கள் பாதிப்பு - 13 வீடுகள், 2 சிறிய கடைகள் சேதம்

மன்னார் மாவட்டத்தில் நேற்று (25) காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட கடும் காற்றின் காரணமாக 16 குடும்பங்களைச் சேர்ந்த 59 நபர்கள் பாதிப்படைந்துள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் கணகரட்னம் திலீபன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்றையதினம் ஏற்பட்ட கடும் காற்று காரணமாக மன்னார் மாவட்டத்தில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 59 நபர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

மேலும் மாவட்டத்தில் 13 வீடுகள் பௌதீக அளவில் பாதீக்கப்பட்டுள்ளதோடு, 2 சிறிய கடைகளும் சேதமடைந்துள்ளது.

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் 5 வீடுகளும், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 5 வீடுகளும், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் 2 வீடுகளும், மடு பிரதேச செயலாளர் பிரிவில் 1 வீடும் சேதமடைந்துள்ளது.

மேலும் மன்னார் எருக்கலம்பிட்டியில் 1 கடையும், கொக்குப்படையான் கிராமத்தில் 1 கடையும் சேதமடைந்துள்ளது.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரியமடு கிராமத்தில் 3 ஏக்கர் பப்பாசிச் செய்கையும், தேவன் பிட்டி, வெள்ளாங்குளம் பகுதியில் 5 ஏக்கர் வாழைத்தோட்டமும் குறித்த காற்றினால் முழுமையாக சேதமடைந்துள்ளது.

மேலதிக நடவடிக்கைகளை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேற்கொண்டு வருகின்றது என அவர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள பல மீனவக் கிராமங்களில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கடல் நீர் கிராமங்களுக்குள் சென்றுள்ளதோடு, கடற்கரையில் கட்டி வைக்கப்பட்ட படகுகளும் நீரில் இலுத்தச் செல்லப்பட்டுள்ளதோடு, மீனவர்களின் மீன் வாடிகளும் சேதமாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நிருபர் லெம்பட்

No comments:

Post a Comment

Post Bottom Ad